அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெற்றுள்ள பெருந்தொகை கடன்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரையில் சுமார் 3,380 பில்லியன் ரூபாவை அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இங்கு 05 மாதங்களில் சுமார் 3085 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மூலமாகவும் 785 பில்லியன் ரூபாவை திறைசேரி பத்திரங்கள் மூலமாகவும் அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது.
உள்நாட்டுக்கடன் தொகை
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 878 பில்லியன் ரூபாவும், பெப்ரவரி மாதத்தில் 661 பில்லியன் ரூபாவும், மார்ச் மாதத்தில் 843 பில்லியன் ரூபாவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 720 பில்லியன் ரூபாவும், இதன் பின்னர் 779 பில்லியன் ரூபாவும் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்நாட்டுக் கடன் தொகை 775 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், ஒரு நாளில் எடுக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 25 பில்லியன் ரூபா எனவும் பேராசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் வாங்கிய கடன் பணமும் இதுவரை பெற்ற மற்றைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக செலவழிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |