பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது: சட்டத்தரணி சுகாஸ்
சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (13.05.2023) திருகோணலையில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பேரினவாத அரசு
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலை, தையிட்டி, வெடுக்குநாறிமலை என சீண்டிய இந்த பௌத்த பேரினவாத அரசாங்கம் இன்று தமிழர் தாயகமான திருகோணமலையுடைய வில்லூண்டி முருகனுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து, நியூசிலாந்தில் இருந்து பிக்குகளை கொண்டு வந்து நாலடி உயரத்தில் சிலை வைக்கப் போகின்றார்களாம்.
இது தமிழர்களை சீண்டுகின்ற செயற்பாட்டின் அதி உச்சம், இதை நாங்கள் அனுமதிக்கப் போவது கிடையாது.
தமிழர்களுடைய தாகயத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற செயற்பாட்டில் ரணில், ராஜபக்ச அரசாங்கத்தின் வீச்சு தீவிரம் பெற்றுள்ளது.
இதற்காக தமிழ் மக்களாகிய
நாம் ஜனநாயக ரீதியில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் இன்றைய தினம் தலைநகரான திருகோணமலையிலே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
விடுதலைக்கான வேட்கை
இந்த இடத்தில், சரத் வீரசேகர, விமல் வீரவம்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாத ஒட்டுமொத்த வடிவத்திற்கும், அவர்களுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் நாங்கள் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.
நீங்கள் எங்கள் மீது ஆக்கிரமிப்புகளை திணித்துக் கொண்டிருந்தால், ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறு தாக்கம் இருக்கும்.
அதற்கு இணையாக தமிழ் மக்களும் எழுச்சி கொண்டு கொண்டே இருப்பார்கள்.
உங்களுடைய ஆக்கிரமிப்புக்கள் எங்களுடைய விடுதலைக்கான வேட்கையை ஒருபோதும் தணிக்காது.
அது இன்னமும் எங்களை வீறு கொள்ளவே வைக்கும் என்ற செய்தியைச் சொல்லி, இறுதிவரை இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடுவோம் என்ற அந்த செய்தியையும் சொல்லி வைக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அழைப்பு
இதேவேளை திருகோணமலை போராட்டத்தில் மக்களை இணையுமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் உறவுகளே. இயலுமானவர்கள் வந்து இணையுங்கள். அல்லது நாளை உங்கள் காணிக்குள்ளும் புத்தர் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி-கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
