அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனினும் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வாழ்க்கை செலவு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காமல் இருப்பதாக சம்மேளனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு
அரசாங்கத்தினாலும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்களாலும் செப்டெம்பர் மாதத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் 1000 ரூபாவால் சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு வருட காலமாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கபடவில்லை.
அரச ஊழியர்கள்
அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் வசதியாக வாழ்கின்றார்கள். எனினும் அரச ஊழியர்களை கண்டுகொள்வதில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri