கட்டுப்பாட்டை மீறும் அரச ஊழியர்களுக்கு எதிராக ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு (VIDEO)
இலங்கையின் பணவீக்கம் 60 தொடக்கம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் விலைமட்டங்கள் அதிகரித்தது என்பது உண்மை. ஒருபக்கம் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்துகொண்டு போகும் நிலைமை இருந்தாலும் கூட அதனை ஈடுசெய்கின்ற அளவுக்கு இலங்கையினுடைய விலைமட்டங்கள் அதிகரித்து செல்கின்றன. எனவேதான் வெளிநாடுகளில் இலங்கை பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகின்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களின் வருமானத்தில் சிறிய ஓர் அதிகரிப்பை செய்யலாம் என்ற அறிவிப்பு ஒன்று வந்ததை தவிர, 36 சதவீதம் வரை வரிகளை அதிகரித்து அதன் மூலமாக கறந்துகொள்கின்ற நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் சம்பளப்பட்டியல் மூலமாக வருமானம் பெறுபவர்கள் தான் இலகுவாக இலக்கு வைக்கப்படக்கூடியவர்கள் எனவும் விரிவுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.