ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர நியமனம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
மாகாணசபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தர நியமனமற்ற 8400 ஊழியர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாணசபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.11.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 36 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணிகளை ஒன்றரை ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றோம்.
பட்டியலிடும் பணி நிறைவு
வட மத்திய மற்றும் வட மாகாணங்களில் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணி நிறைவடைந்துள்ளன.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன் இரு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய 6 மாகாணங்களுக்கான காலவரையறையை தயாரித்து பயிற்சிகளை வழங்கி 2024ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் தமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைக்கு ஒன்பது பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri