அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமா?
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜித் கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி அலவத்துகொடவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You May Like This Video..
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam