ஜனாதிபதியானதும் கோட்டாபய எடுத்த நடவடிக்கை! பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பான தகவல் (Video)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்து அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளுக்கு அமைய 34 ஆயிரம் சிற்றூழியர்களாக உள்வாங்கப்பட்டார்கள். அதன் பின்னர் நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த 34 ஆயிரம் பேரில் வடக்கு மாகாணத்தில் 117 பேர் மாத்திரமே சிற்றூழியர்களாக உள்வாங்கப்பட்டார்கள். ஐந்து மாவட்டங்களைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் 117 மாத்திரமே சிற்றூழியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,