சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
சிரேஷ்ட அரச அதிகாரிகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிரேஷ்ட அரச அதிகாரிகளின், வெளிநாட்டுக்கான உத்தியோகபூர்வ பயணங்களின்போது, விமானங்களில் வணிக வகுப்பில் பயணிப்பதை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை, ஜனாதிபதி செயலகம் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சலுகைகளை அனுபவிக்க கட்டுப்பாடு
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலகங்களில் பணியாற்றுபவர்கள் உட்பட, சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரை சலுகைகளை அனுபவித்த, பல அதிகாரிகள், விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது.
செலவினங்களைக் குறைக்கும், அரசின் கொள்கையின்படி, இந்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
