இலங்கையில் அரச அதிகாரிகள் இழைத்த தவறு! நினைத்துக் கூட பார்க்க முடியாத தொழில் வாய்ப்புகள்

Sri Lanka Economic Crisis Government Employee Sri Lanka Diana Gamage
By Benat Jan 03, 2023 10:18 AM GMT
Report

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என  சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். 

மேலும், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இலங்கையில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

வெளிநாட்டு கையிறுப்பு பற்றாக்குறையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வங்குரோத்து நிலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச தரப்பினர் அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள்

இலங்கையில் அரச அதிகாரிகள் இழைத்த தவறு! நினைத்துக் கூட பார்க்க முடியாத தொழில் வாய்ப்புகள் | Government Employee Sri Lanka

நாடு என்பதொன்று மிகுதியாக இருந்தால் தான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும்.

நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. எதிர்தரப்பினர் மாத்திரம் தேர்தலை கோருகிறார்கள். தூர நோக்கமற்ற கொள்கை இல்லாத காரணத்தினால் மின்சாரம், சுகாதாரம், வலுத்துறை ஆகிய துறைகளில் பல பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மின்சாரம், நீர், எரிபொருள் உள்ளிட்ட சேவைகளின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.

வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை, வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும். கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.

இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள்.

தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது  என குறிப்பிட்டுள்ளார். 

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US