அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! திங்கட்கிழமை முடிவு
அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் சுமையும் சம்பள அதிகரிப்பும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும், சந்தையில் தற்போது பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. அத்துடன் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு இந்த அரசாங்கம் நிவாரணத்தினை வழங்க வேண்டும்.
உயர்ந்துள்ள வாழ்க்கைச் சுமைக்கமைய, அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளம் அவர்களுக்கு முழு மாதத்திற்குமான தேவைகளுக்கு போதாது.
அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளத்தைக் கொண்டு மாதத்தில் இரண்டு வாரங்களை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எனவே அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் திங்கட் கிழமை ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தங்களது சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற பாரிய எதிர்பார்ப்பு அரச ஊழியர்களிடத்தில் உண்டு.
இவ்வாறான நிலையில், அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை கருத்திற்கொண்டு குறைந்தபட்சம் அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
