ஜனாதிபதியின் அறிவிப்பால் நிர்க்கதியான நிலையில் மூவாயிரம் அரச ஊழியர்கள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பளம் இன்றி சுமார் 3,100 அரச ஊழியர்கள் பங்குபற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த அரச ஊழியர்கள் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பளமற்ற விடுமுறையில் அரச ஊழியர்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பளம் இன்றி சுமார் 3,100 அரச ஊழியர்கள் பங்குபற்றுகின்றனர்.
தேர்தலை நடத்துவது தொடர்பில் இதுவரையில் சரியான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் குழுவின் சார்பில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு சுமார் 3,100 அரச ஊழியர்கள் முன்வந்துள்ளனர். சம்பளம் இன்றி விடுமுறையில் உள்ளனர்.
தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார். அவ்வாறு இருக்க இந்த 3,100 ஊழியர்களுக்கும் என்ன தீர்மானத்தினை எடுத்துள்ளீர்கள் என இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் பிரதமரிடம் கேட்கிறேன் எனவும் சன்ன ஜயசுமன கேள்வி எழுப்பியிருந்தார்.