அரச ஊழியர்களின் டிசம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு
டிசம்பர் மாதத்தில் மொத்த அரச வருமானமாக இருந்தது 141 பில்லியன் ரூபாய்களாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டிசம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்ற மொத்த அரச வருமானத்தில், 88 பில்லியன் ரூபாய் அரச மற்றும் ஓய்வூதியக்காரர்களின் சம்பளத்திற்குச் செலவிடப்பட்டது. சமுர்த்திக்கு 30 பில்லியன். உரத்திற்கு 6.5 பில்லியன் செலவிடப்பட்டது.
அச்சிடப்பட்ட பணம்
அத்தியவசிய மருந்துகளுக்காக 8.7 பில்லியன் ரூபாயும், மீதமுள்ள தொடர் செலவினங்களுக்காக 21 பில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டது.
இவற்றுக்கு மட்டும் 154 பில்லியன் ரூபாய் செலவாகின்றது. ஆனால் 141 பில்லியன் ரூபா வருமானத்தால் இந்த செலவுகளை ஈடுகட்ட முடியாது.
இதுதவிர வாங்கிய கடனுக்கான வட்டி டிசம்பரில் 182 பில்லியன் செலுத்த வேண்டியிருந்தது. டிசம்பரில் இவற்றைச் செலுத்தியது பணத்தை அச்சிட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
