அதிகரித்துள்ள அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு : அரச சேவையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு
அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கம் ஏதும் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நிலையான பொருளாதார கொள்கை
ஜனாதிபதியிடம் வரவு செலவு திட்டத்தை புகழ்ந்து விட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஒருவருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் எடுத்ததால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதார கொள்கை என்பதை இலக்காக கொண்டுள்ளது.
அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கம் ஏதும் கிடையாது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் யோசனைகள் குறித்து நிச்சயம் அவதானம் செலுத்துவோம். எதிர்க்கட்சிகளை புறக்கணித்து ஒருபோதும் செயற்பட போவதில்லை.பொருளாதார மீட்சிக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
