அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை சம்பளம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'' அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை சஜித்தோ அனுரவோ மீள கட்டியெழுப்பவில்லை.
சிலிண்டர் விலை
சிலிண்டர் விலை 6,000 ரூபாய் வரை உயரும் போது சஜித், அனுர போன்றவர்கள் எங்கே இருந்தனர் என்று கூற வேண்டும்.
அதற்கான பதிலை அவர்கள் வழங்கவில்லையாயின் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமற்றவர்களாவர்.''என கூறியுள்ளார்.

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
