ஜூலை மாதத்திற்கான ஓய்வூதியத் தொகை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் உள்ள ஏழு இலட்சத்து எட்டாயிரத்து இருநூற்று முப்பத்தொரு(708,231) ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டுள்ள பணம்
அரச ஊழியர்களுள் சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு வங்கிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, 24 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் தபால் திணைக்களத்திற்கும் 28.5 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், 99.5% பேருக்கு ஜூலை 10 ஆம் திகதி தாமதமின்றி ஓய்வூதியம் கிடைக்கும்.
ஜுலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பிரதேச செயலகங்கள் தமது கடமைகளை மேற்கொள்ளாத காரணத்தினால், 13,000 பேரில் வெகு சிலர் ஜுலை 11 ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவைப் பெறுவார்கள் என ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 20 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri