அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு தேவையான பணம் அரசாங்கத்திடம்!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பது உண்மையல்ல. சம்பளத்தை அதிகரிப்பதற்கு பணம் உள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களை ஜனாதிபதி ஏமாற்றக் கூடாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறு செய்வதற்கு நிதி உள்ளதா.
தற்போது அரிசி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விடுவிக்காவிட்டால் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதாக ஜனாதிபதி கூறியதைக் கேட்டேன். ஏமாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறிக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி இதுவரை எனக்கு அழைப்பு ஏதும் ஏற்படுத்தவில்லை. அவர் எனக்கு அழைப்பை மேற்கொண்டால் அவருடன் கதைப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பது உண்மையல்ல. சம்பளத்தை அதிகரிப்பதற்கு பணம் உள்ளது.
அரசாங்கத்தின் வரி வருமானத்தை இரண்டு இலட்சத்தில் இருந்து ஒரு இலட்சமாக குறைக்கும் பட்சத்தில் அதனை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு இல்லையென்றால் பணம் அச்சிட வேண்டும். அதனையும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.