சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை!
நாட்டின் பொருளாதார நிலைமை இன்னமும் முழுமையாகச் சீரடையவில்லையென்றே கூற வேண்டும். ஆனால், அன்று இருந்ததை விட இன்று பொருளாதாரம் ஓரளவுக்கு சீரடைந்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியரின் சம்பளம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் உலகத்தை ஒப்பீட்டளவில் பார்க்க வேண்டும். இன்று கடைக்குச் சென்றால், வாங்க வேண்டிய பொருட்கள் அதிகம். அரச ஊழியரின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்று சமுர்த்தியில் 4,500 பெற்றுக் கொண்டவர் இன்று 15,000 ரூபாவை பெறுகிறார்.
அன்று விவசாயிகள் யூரியாவை 50,000 ரூபாவுக்கு வாங்கினார்கள். இன்று அந்த நிலைமை மாறி 10,000 ரூபாவுக்கு அதனை வாங்கக் கூடியதாகவுள்ளது.
இவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, நாம் சரியானதொரு இடத்தை நோக்கிச் செல்கின்றோம் என்பது தெளிவாகின்றது.
பொருளாதாரம் உறுதியான நிலையில்
2023 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு உறுதியான நிலைக்குச் சென்றுள்ளது. எதிர்க்கட்சிகள் எல்லாம் கூச்சல் போடுகின்றன.
தேர்தல் ஆண்டு என்பதால் இந்த வேலையை செய்ய முடியாது. சம்பளம் கூட கொடுக்க முடியாத நாட்டில் 10,000 ரூபாயை கூட அரச தலைவர் உயர்த்தினார்.
எதிரணியைப் பொறுத்தவரை, இதையெல்லாம் நாம் நிறுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். பொறுப்பிலிருந்து தவறிய ஒரு எதிர்க்கட்சியை நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |