மத்திய வங்கி ஊழியர்களின் இலட்சக்கணக்கான சம்பளம் : அரச ஊழியர்களால் பாரிய பிரச்சினை ஏற்படலாம்
மத்திய வங்கி ஊழியர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அரச ஊழியர்களும் இதுபோன்ற சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, நேற்றையதினம் சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்ற நிலையில், அந்த சமயம் தனது கருத்துக்களை வெளியிடும் போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் போது மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது அனைத்து இலங்கையர்களுக்கும் இழைக்கப்பட்ட பாரிய அநீதி ஆகும்.
நாட்டில் சாதாரண மக்கள் துன்பப்படுகின்றார்கள் என்றால் அனைத்து மட்டத்திலும் உள்ளவர்களும் துன்பப்பட வேண்டும். சாதாரண மக்கள் மாத்திரம் துன்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த அநீதி குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மாத்திரமே இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஏனைய அரச ஊழியர்களும் கோரிக்கைகளை முன்வைத்தால் பெரும் பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
