அரசாங்கத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்(Video)
வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30) மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
20ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் நாடு முழுவதும் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, 20 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கு, வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
புத்தளத்தில் ஆர்ப்பட்டம்
2024ம் ஆண்டிற்கான பாதீட்டில் 20000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எதிர் வருகின்ற 2024ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் இருபதாயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்று புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகம், நகரசபை மற்றும் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டத்து.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மின்கட்டணம் அதிகரிப்பு எரிபொருள் விலை அதிகரிப்பு போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு என பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செய்தி- அசர்





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
