அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு, அமைச்சுகள், உள்ளூராட்சிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முற்பணம் செலுத்தும் நடவடிக்கை 01.01.2023 அன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 28.02.2023 அன்று முடிவடையவுள்ளது.
இந்த சுற்றறிக்கை பொது திறைசேரியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 31 ஆம் திகதி முதல் 30,000 க்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுபவர்களையும் உள்ளடக்கி வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவானோர் இன்று ஓய்வு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவற்றில் மின்சார சபையின் 1100 ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதுடன், அவர்களின் வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது எனவும்
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.