அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு பொறுப்பேற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டு வெறும் அரசியல் ஆர்வமுள்ள ஒருவரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டாக கருதப்படுகின்றது.

அடுத்த ஆண்டிற்கான அரசின் செலவு
அடுத்த ஆண்டிற்கான அரசின் செலவு சுமார் ரூ. 7885 பில்லியன் ஆகும். அதில் 10 சதவீதம் சமூக நலத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகை கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களை விட அதிகமாகும்.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு 1,000 பில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது.
நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட 5.8 மில்லியன் குடும்பங்களில், சுமார் 3.4 மில்லியன் குடும்பங்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறும் நிலையில் உள்ளன.
எனவு தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட தொகை குறைக்கப்படும். இவற்றினை கருத்திற்கொண்டே இந்த வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam