தேர்தலுக்கு பணமில்லை என்று கூறும் அரசாங்கம் இரண்டு புதிய அமைச்சர்களை நியமித்துள்ளது
தேர்தலை நடத்த பணம் இல்லை என்று கூறும் அரசாங்கத்திற்கு பணத்தை தேடிக்கொள்ளும் முறையை தான் கூறியுள்ளதாகவும் தான் கூறியது போல் செயற்பட்டால் குறைந்தது அமைச்சர்களின் ஆடைகளையாவது பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அனுராதபுரம் மாவட்ட செயலகத்திற்கு நேற்று சென்றிருந்த அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
மக்கள் சுதந்திர முன்னணிக்கு அனுராதபுரத்தில் மக்களின் சிறப்பான ஆதரவு இருக்கின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை தேர்தல் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கு கிடைக்கும் நிலைமையே காணப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாது அதன் பிரதிநிதிகளுக்கு கோடிக்கணக்கில் சம்பவளம் வழங்கப்படுகிறது
அதேவேளை அரசாங்கம் தேர்தல் சம்பந்தமாக கூறும் கதைகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. தேர்தலை நடத்த பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
இப்படியான நிலையில் இரண்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
மறுபுறம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாமல் இருப்பதுடன் அவற்றின் பிரதிநிதிகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது.
அமைச்சரவை உறுப்பினர்களும், அவர்களின் ஊழியர்கள் குழாமும் ஒரு மாத சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்து, உள்ளூராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கின்றோம்.
இவர்கள் ஒரு மாத சம்பளத்தை அர்ப்பணித்தால், அது தேர்தல் செலவுக்கு போதுமானது எனவும் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
