தேசிய வளங்களை எந்த காரணம் கொண்டும் அரசாங்கம் விற்பனை செய்யாது! - காமினி லொக்குகே
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை உண்மை என மின் வலு அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளதை போல், சர்வதேச நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டிற்குள் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருக்கின்றது.எனினும் தேசிய வளங்களை எந்த காரணம் கொண்டு அரசாங்கம் விற்பனை செய்யாது எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டமை குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan