ஆறாவது நாளாகவும் அரச வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது! (Video)
அரச வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகளை நம்பியே சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
எனினும் இன்றைய தினமும் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டதன் காரணமாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந் நிலையில், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் ஒருசில வைத்தியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தனர் என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய உத்தியோகஸ்த்தர்களின் சங்கம் இடம்மாற்ற சபைக்கு அப்பால் 500
வைத்தியர்களை இணைப்பு செய்துள்ளமைக்கும் மேலும் 7 கோரிக்கைகளை முன்வைத்தே
கடந்த 18ம் திகதி முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.