கஜிமாவத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல நிவாரணங்களும் வழங்க அரசாங்கம் தீர்மானம் (Video)

Dinesh Colombo Sri Lanka Politician Prime minister
By Kamal Sep 29, 2022 07:07 AM GMT
Report

கொழும்பு மாவட்டச் செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் நேற்றுமுன் தினம் (27.09.2022) இரவு ஏற்பட்ட தீயினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (28.09.2022) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

தீ விபத்தினால் சுமார் 71 வீடுகளில் இருந்த 306 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 60 வீடுகள் முழுமையாகவும், 11 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள்


தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள 306 பேரில் 106 சிறுவர்கள் அடங்குவர். இதற்கமைய, பாதிக்கப்பட்ட மக்கள் மோதரை உயன சனசமூக மண்டபத்திலும் களனி நதீ விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபை, மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு பொலிஸ் மற்றும் முப்படை ஆகியன இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, பானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன. 

இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான சுகாதார வசதிகள், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகிறது.

சர்வோதயம் உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டதாகவும் மாவட்டச் செயலாளர் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கஜிமாவத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல நிவாரணங்களும் வழங்க அரசாங்கம் தீர்மானம் (Video) | Government Decided To Provide Reliefkajimawat Fire

கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் பாலத்துரை கஜீமாவத்தை குடியிருப்புகள், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடைநிலை முகாமாக பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் அங்கு வசித்தவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் 2015ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை, சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அவ்வப்போது ஆக்கிரமித்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள்

மேற்படி வீடுகள் கடந்த இரண்டு வருடங்களுள் 03 தடவைகள் தீக்கிரையாகி இருப்பதனால், நேற்றுமுன் தினம் (27.09.2022) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கலந்துரையாடலில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், கொழும்பு பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், அரசாங்க பரிசோதகர், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் தலைமை அதிகாரி மற்றும் மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால அபிவிருத்தி

தீ விபத்திற்கான காரணங்கள் மற்றும் இந்த பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் குடியிருப்பாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் அடுத்த 07 நாட்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இந்த விசாரணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள சகல பாடசாலை மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் வழமை போன்று பாடசாலைக்குச் செல்லத் தேவையான பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஜிமாவத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல நிவாரணங்களும் வழங்க அரசாங்கம் தீர்மானம் (Video) | Government Decided To Provide Reliefkajimawat Fire

அத்துடன், கர்ப்பிணித் தாய்மாருக்கும் பெண்களுக்கும் சகல சுகாதார வசதிகளையும், சமைத்த உணவுகளையும் தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தற்காலிக தங்குமிடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, யாதாமினி குணவர்தன, மதுர விதானகே, ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துகொட, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US