விவசாயிகளை வைத்து பிழைப்பு நடத்தும் சஜித் அணி: அரசு குற்றச்சாட்டு
விவசாயிகளைத் தூண்டிவிட்டு, அவர்களை வீதியில் இறக்கி அதன்மூலம் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றது ஐக்கிய மக்கள் சக்தி என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ(Arunthika Fernando).
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
"இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு, சேதன பசளை மூலமான விவசாயத்தை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. இரசாயன உரம் என்பது நஞ்சு. எமது மக்களைக் காக்க நாமும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றோம். அதற்காகவே உர இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் விவசாயிகளைத் தூண்டிவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் அவர்களின் போராட்டங்கள் ஊடாகவும் அரசியல் செய்கின்றது.
மேற்படி கட்சிகளும் இரசாயன உரத்துக்கு எதிர்ப்பு. ஆனால், எதற்காக தற்போது
இரசாயன உரத்துக்கு குரல் கொடுக்கின்றனர் எனத் தெரியவில்லை" - என்றார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri