இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க சதி செய்யும் அரசாங்கம் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அனுராதபுரத்தின் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச சபைகளுடன் இணைத்து எல்லை நிர்ணயம் என்ற பெயரில் சிங்கள மக்களை வவுனியா மாவட்டத்தில் கூட்டி இந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnampalam) தெரிவித்துள்ளார்.
வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக வவுனியா வடக்கில் இன விகிதாசரத்தை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தின் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச சபைகளுடன் இணைத்து எல்லை நிர்ணயம் என்ற பெயரில் சிங்கள மக்களை வவுனியா மாவட்டத்தில் கூட்டி இந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமக்கு தெரியவந்த நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஸவிடம்(Chamal Rajapaksha) மகஜர் ஒன்றை கையளித்து இருந்தோம்.
அந்த நவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அவசரமாக அமைச்சரை சந்திக்க வேண்டும் எனவும் அதில் கேட்டிருந்தோம்.
நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் அந்த கடிதத்தில் கையொப்பம் இட்டார்கள்.
அதற்கமைய சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியிருந்தும் கூட, கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இதுவரை அந்த சந்திப்புக்குரிய நேரம், நாள் ஒதுக்கப்படாது அரசாங்கம் நழுவிப் போகின்றது. இதனால் நாங்கள் எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியிருக்கின்றோம்.
தமிழ் பிரதேசங்களை சிங்களமயமாக்கல் என்ற ரீதியில் இந்த நடவடிக்கை மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள எல்லை பிரதேசங்கள் மற்றும் பொலனறுவை மாவட்டம் என்பவற்றுடன் சேர்த்துக் கொள்ளும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
ஆகவே, திட்டமிட்ட வகையில் எல்லா கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி தமிழர்கள் தொடர்ந்தும் இந்த தீவில் ஒரு தேசமாக வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அதாவது ஒரு இனவழிப்பு செய்யும் நோக்கோடு இலங்கை அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த யதார்த்தத்தை உலகிற்கு
சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த போராட்டத்தை
நடத்துவதன் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும்
நாடுகளின் தலைமைகளுக்கும் இந்த விடயத்தை தெளிவாக பதிவு செய்ய விரும்புகின்றோம்
என குறிப்பிட்டுள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri