புலம் பெயர் அமைப்புக்களை துாக்கி எறிந்த அநுர அரசு
இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது.
எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன.
தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன.
அந்தவகையில் இலங்கையில் வரலாற்று ரீதியான ஆட்சியை கைப்பற்றியுள்ள அநுரகுமார திசாநாயக்க அரசு, சர்வதேச பொறிமுறையின் ஊடாக தமிழர்களுக்கான உள்ளக விசாரனையை ஆரம்பிக்க புதிய நகர்வை கையாள திட்டமிட்டுள்ளதாக அரசியல் தற்போது வட்டாரங்களில் சில கருத்துக்கள் மேலோங்கியுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ், சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு என சுட்டிக்காட்டினார்.
மேலும் , இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |