இதை செய்தால்தான் அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியும்
தமிழ் மக்களின் மனங்களை அரசாங்கம் வெல்லவேண்டுமானால் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் (Sivapatham Kuganesan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவீரார் நாள் அனுஸ்டிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 47 பேருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக இம்முறை மாவீரர்நாள் கொண்டாடப்படாத சூழல் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டுமானால் இந்த அரசாங்கம் மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும்.
மக்களின் ஆத்ம திருப்த்திக்காக மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்களில் மக்கள் சென்று வழிபடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இவ்வாறு மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கினால் மட்டுமே தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியும் என தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri