விபத்தில் சிக்கிய அரச பேருந்து: 75 பேரின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றிய சாரதி
பதுளை - ஸ்பிரிங்வெளி வீதியில் வீரியபுர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றின் பின்பகுதியில் உள்ள சக்கரம் ஒன்று கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தின் சாரதி சாமர்த்தியமாக செயற்பட்டு பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 75 பேர் வரை பயணித்துள்ளதாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இன்று (22 ஆம் திகதி) ஸ்பிரின்வலி பத்தேகமவில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாரதியின் சாமர்த்தியத்தால் பேருந்து நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பதுளை டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam