அரசாங்கம் மீண்டும் முஸ்லிம் எதிர்ப்பை தூண்டி விட ஆரம்பித்துள்ளது! - நளின் பண்டார
நாட்டிற்குள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு உருவாகி வரும் நிலைமையில், அரசாங்கம் வழமை போல் முஸ்லிம் எதிர்ப்பை தூண்டி விட ஆரம்பித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து நளின் பண்டார இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்குப் பயன்படுத்திய சில விடயங்கள் இருந்தன. அதில் ஒன்று முஸ்லிம் எதிர்ப்பு. ஏன் முஸ்லிம் எதிர்ப்பை உருவாக்கினார்கள்?. ஒரு புறம் றிசார்ட்டை பயன்படுத்தினர்.
அதேபோல் மருத்துவர் ஷாபியை பயன்படுத்தி பெண்களுக்குக் கருத்தடை செய்வதாகக் கூறினர். அடுத்தது கருத்தடை மாத்திரை, கருத்தடை கொத்து ரொட்டி என்பவற்றைப் பயன்படுத்தினர்.
இவற்றைப் பயன்படுத்தியே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். தற்போது அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு உருவாகும் போது, இவற்றை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இடி மின்னல் ஏற்படும் போது இரும்பு துண்டை வெளியில் போடுவது போல், மீண்டும் இந்த விடயங்களை வெளியில் கொண்டு வருகின்றனர் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.