கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி மே தின நிகழ்வுகளைத் தடை செய்தது அரசு!
ராஜபக்ச அரசுக்குள் வெடித்துள்ள பூகம்பத்தால் அதன் முக்கிய பங்காளிக் கட்சிகள் இம்முறை மே தின நிகழ்வுகளைத் தனித்தனியே நடத்த முடிவெடுத்துள்ள நிலையில், அதனை அடக்கும் வகையில் இராணுவத் தளபதியூடாக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய இம்முறை மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் இரத்துச் செய்ய கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது என அதன் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக எந்தவொரு மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த வேண்டாம் எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக்கொள்கின்றது.
இந்தத் தீர்மானத்துக்கு இணங்க அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுக்க எவரும் இடம் கொடுக்கக்கூடாது.
மக்கள் அனைவரும் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" - என்றார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri