மொட்டு கட்சியை திருப்திப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம்
அமைச்சரவை பொறுப்புக்களை வலியுறுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அதன்படி, அவர்களை உள்ளடக்கிய 'உயர் பதவிக் குழு' என்ற தனி அமைப்பை உருவாக்கி, அவர்களுக்குச் சலுகைகளுடன் பொறுப்புகளையும் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை பொறுப்புக்களை விடக் குறைவான எதையும் தாம் பெற்றுக்கொள்ளமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வெற்றிடங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் 30 பேர் கொண்ட அமைச்சரவையைக் கொண்டிருக்கலாம்.
இதன்படி இன்னும் 8 அமைச்சர்களை நியமிக்க வெற்றிடங்கள் உள்ளன.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனியும் அமைச்சரவையின் அளவை அதிகரிக்கத் தயாராக இல்லை என்ற விடயம் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |