அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.
தற்போது சதொச தவிர்ந்த ஏனைய இடங்களில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான தண்டப்பணத்தை ஒரு இலட்சம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தில் தீரத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அரிசி விற்பனை செய்யப்படுமாயின் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆனால் தற்போது மக்களால் சுமக்க முடியாத அளவிற்கு அரிசி சில இடங்களில் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி போலியான அரிசிப் தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் விலையை அதிகரிக்க முயன்று வருவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
