வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர்

Government Of Sri Lanka Canada Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Aug 20, 2026 01:38 PM GMT
Report

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20.08.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர் | Government Allocated Sufficient Funds

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை

சந்திப்பின்போது ஆளுநர், உயர்ஸ்தானிகரை அன்புடன் வரவேற்று, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதன்போது, டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் விரிவாக விளக்கமளித்தார்.

பாதிப்புகளுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அவற்றைத் தேவைக்கேற்ப தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர் | Government Allocated Sufficient Funds

டித்வா பேரிடர் காரணமாக வடக்கு மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும், மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இம்முறை சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலைப் பெற்றுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அதிகரித்துள்ள நெல் உற்பத்தியை விவசாயிகளுக்கு பொருளாதாரப் பயனாக மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள்

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர் | Government Allocated Sufficient Funds

இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்களையும் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் சமகால சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம், வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் ஆளுநருடன் கலந்துரையாடினார்.

வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர் | Government Allocated Sufficient Funds

நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு

நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு

கோர விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு

கோர விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US