கிளிநொச்சியில் தையல் பயிற்சியை ஆரம்பித்து வைத்த அரசாங்க அதிபர்
கிளிநொச்சி- மணியங்குளத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட அலுவலகம் இணைந்து நடாத்தும் தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம்(15) ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தையல் பயிற்சியினை நிறைவு செய்த நான்காவது அணியினருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
தையல் பயிற்சி
அதன் ஸ்தாபகர் தம்பிராசா ஜெஜீவனால் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 11 வருடங்களாக செயற்பட்டு வட கிழக்கில் 170க்கு மேற்பட்ட வீடுகள், மருத்துவ வசதி, நீர் வசதி, மலசலகூட வசதி, கல்விக்கான உதவிகள், தையல் பயிற்சி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவர் ஞானப்பிரகாசம் தயாளினி தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமசேவகர் சுதர்சன் சர்மிளா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் துஸ்யந்தன் சாந்தகுமாரி, ஜீவ ஊற்று அன்பின் கரம் உப தலைவர் எஸ்.சீலன், கிளிநொச்சி, முல்லைத்தீவு உறுப்பினர்கள், கரைச்சி பிரேதேச சபை உறுப்பினர் , வணங்காமண் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் ஜீவா , வன்னி தமிழ்மக்கள் ஒன்றியத்தினர், கிரிவலம் அறக்கட்டளையினர், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











