அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த திங்கட்கிழமை முதல் வழமையை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றரிக்கை இன்றைய தினம் வெளியிடப்படும் என எதி்ர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் நீடித்தாலும் அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் அன்றைய தினம் முதல் பணிக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயில், அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் வழமையை போன்று மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக அரச நிறுவனங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் ஊழியர்களை அழைக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதற்கான சுற்றரிக்கை கடந்த மே மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
