தனக்குத்தானே குழி தோண்டும் அரசாங்கம்: நாமல் கடும் குற்றச்சாட்டு
அரசாங்கம் தனக்குத்தானே குழி தோண்டிக்கொண்டிருக்கிறது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்த நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை குறைந்தபட்சம் ஓரளவு நிறைவேற்ற நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதே எதிர்க்கட்சியின் பங்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
தாங்க முடியாத வரிகள்
நிகழ்வு ஒன்றில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு தாங்க முடியாத வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் உயிர்களைக் காப்பாற்றக்கூடிய பல பகுதிகளில் அரசாங்கம் உடனடியாகச் செயற்படத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இழப்பீடு வழங்குவதற்கு முன்னுரிமை
அரசாங்கம் இழப்பீடு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இடம்பெயர்ந்த குடும்பங்களை அவர்களின் வீடுகளில் மீள்குடியேற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க் கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri