விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை! அநுர விளக்கம்
தமிழ் புலம்பெயர்ந்தோரின் ஆதரவால் முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் கருத்துக்கள் நகைச்சுவைமிக்கது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நிஷாந்த உலுகேதென்ன
தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது.
நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் செயற்படுவதாக கூறுகின்றார்கள்.
நாங்கள் திருப்திப்படுத்துவது நமது நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களையே. அதுவே எங்களது கடமை.
நீதி மறுக்கப்பட்டது
முன்னைய அரசாங்கத்தால் இந்த நீதி மறுக்கப்பட்டது. நீதியை தவறாக பயன்படுத்தியவர்களே அவர்கள். அது மக்களுக்கும் தெரியும்.

கோட்டபாய அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் பயணத்தடைகளை விதித்திருந்தன. இந்த மோசடி கும்பலுக்கு பயந்து நிஷாந்த சில்வா நாட்டை விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பியோடினார்.
நீதியின்படி செயற்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஷானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்,
ஆனால் தற்போது நீதி சரியாக செயற்படுகிறது. நியாயமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன" என்றார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam