இலங்கையில் ஏற்பட்டுள்ள இழப்புக்களை ஏற்றுக் கொண்டது அரசாங்கம்!
வாகன இறக்குமதிகள் நிறுத்தப்பட்டமையின் காரணமாக பலர் தமது தொழில்களை இழந்துள்ளார்கள் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனினும் வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என்ற கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சரவையின் இணைப்பேச்சாளா் ரமேஸ் பத்திரன தொிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிகள் நிறுத்தப்பட்டமையால், பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும்போது அரசாங்கம் தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும் என்று ரமேஸ் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இலங்கையில் நிலைமைகள் சுமூகமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri