பெப்ரவரி 28 ஆம் திகதி இலங்கைக்கு மிக முக்கிய நாள்
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வைப் பற்றி விவாதித்து ஒப்புதல் அளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 2025 பெப்ரவரி 28ஆம் திகதி அன்று கூடவுள்ளது.
இந்த திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து, சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், 2024, நவம்பர் 23 அன்று பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டினர்.
இந்த நிலையில், நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால், நிதி வசதி திட்டத்தி அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கும்.
நாணய நிதியத்தின் ஒப்புதல்
முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் என்பது "திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க" 2025 வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தல் உட்பட முந்தைய நடவடிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்துவதைப் பொறுத்தது என்று, அந்த நிதியத்தின் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அதன்படியே, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை, இலங்கை அரசாங்கம், நேற்று சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |