அரசாங்கத்தின் அரிசி இறக்குமதியில் கால தாமதம்
அரசாங்கத்தின் அரிசி இறக்குமதியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி எப்பொழுது நாட்டை வந்தடையும் என்பதனை உறுதியாக கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடைவள பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன(Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை
தனியார்துறையினர் இறக்குமதி செய்த அரிசி தொகைகள் ஓரளவு நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை எப்பொழுது நாட்டை வந்தடையும் என்ற கேள்விக்கு வர்த்தக விவகார அமைச்சே பதிலளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு ஜனாதிபதி நேரடியாக தலையீடு செய்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலையீட்டைத் தொடர்ந்து அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தைக்கு தற்பொழுது அரிசி விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.