அரச புலனாய்வுப் பிரிவு போலி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட முயற்சி
போலியான முறையில் மக்கள் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை அரச புலனாய்வுப் பிரிவினர் தயாரித்து வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது என வெளிக்காட்டும் நோக்கில் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைய எவ்வித சாத்தியங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் கைகோர்த்துக் கொண்டுள்ளதாகவும், மக்கள் ஆதரவு குறையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகள் அச்சம்
தேசிய மக்கள் சக்தி மீது கொண்ட அச்சம் காரணமாக பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்கள் ஆதரவு எந்த வகையிலும் குறையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
