கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்த இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது

Covid-19 Government People Mahinda rajapaksa
By Independent Writer Jun 30, 2021 01:29 PM GMT
Report

கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் இன்று (30) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சிற்குரிய அனைத்து நிறுவனங்களதும் தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவினால் இதன்போது 'சவாலுக்கு மத்தியில் சுபீட்சத்தை நோக்கி' என்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மற்றும் எதிர்கால நோக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

கோவிட் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்த எஸ்.ஆர்.ஆட்டிகல, சமூக பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான மூன்றாவது அலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கடினமான சூழ்நிலையிலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட நிவாரணம் பெறத் தகுதியான மக்களுக்காகப் பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எஸ்.ஆர்.ஆட்டிகல, 2019ஆம் ஆண்டு தீர்க்கப்படாதிருந்த 423 பில்லியன் நிலுவைத் தொகையைச் செலுத்திய பின்னரே கடந்த வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி விகிதத்தைக் குறைத்து கடன் நிவாரணங்களை வழங்கியும், பணவீக்கத்தை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகப் பேணுவதற்கு முடிந்ததாகவும், கடந்த மே மாதம் அது 6.1 சதவீதம் அல்லது 6.2 வரை அதிகரித்த போதிலும் அதனைக் குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக எஸ்.ஆர்.ஆட்டிகல சுட்டிக்காட்டியுள்ளார்.

பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இதுவரை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் 11000 ஆகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் கொடுப்பனவு வழங்கப்படும் சகல மக்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு நான்கு முறை வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.

500 உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீல் பண்டார ஹபுஹின்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் கலந்துரையாடி வட்டி விகிதத்தைக் குறைத்து கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு முடிந்ததாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பீ.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு நிதித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்த ஆர்.எம்.பீ.ரத்நாயக்க 2022 ஜனவரி மாதமளவில் தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனமொன்றை நாட்டில் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2020-2024 காலப்பகுதியில் பங்குச்சந்தையில் புதிதாக 500 நிறுவனங்களைப் பட்டியலிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி வெவ்வேறு கருத்துக்களை முன்வைப்பினும் இதுவரை வெளிநாட்டுக் கடன்களை முறையாகச் செலுத்த முடிந்துள்ளதாகவும், அதேபோன்று எதிர்காலத்திலும் அக்கடன் தவணைகளை எவ்வித தாமதங்களும் இன்றி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிளுயு.டீ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் பல்வேறு இடங்களில் பரந்து காணப்படும் நிறுவனங்களை மக்களின் வசதிக்காக ஒரே கட்டிடத்தொகுதிக்குக் கொண்டு வருவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷெஹான் சேமசிங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ச, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அரச வங்கி மற்றும் நிதி அமைச்சிற்குரிய நிறுவனங்களின் பிரதானிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US