ஹரக்கட்டாவை தடுத்து வைத்துள்ள அரசாங்கம்.. பிண்ணனியில் பாரிய நிதி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான ஹரக்கட்டா என்ற நதுன் சிந்தகவிற்காக அரசாங்கம் மாதத்திற்கு கிட்டத்தட்ட நூறு மில்லியன் ரூபாவை செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய அரசியல்வாதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தலைவர்களுடன் ஒரு வலையமைப்பை உருவாக்கி ஒரு பயங்கரமான குற்ற அலையை உருவாக்கியதாக கூறப்படும் ஹரக்கட்டா, தொடர்ச்சியான விசாரணைகளுக்காக தனிமையில் தங்காலை பழைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது பாதுகாப்பிற்காக 63 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 24 சிறப்புப் படை அதிகாரிகள் உட்பட சுமார் 87 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதி தீவிர பாதுகாப்பு..
ஒரு அதிகாரியின் மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபாயாகக் கணக்கிடப்பட்டால், அதற்கான செலவு 8.7 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உணவின் விலை ரூபா100 என்று வைத்துக் கொண்டால், மூன்று வேளை உணவுக்கு ஒரு நபருக்கு 1,150 ரூபாய், 50 பணி மாற்றங்கள் என்கையில், மாதாந்திர உணவு செலவு ரூபா 16,10,000 என கணிக்கப்படுகின்றது.
மேலும், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உட்பட மொத்தச் செலவும், காலி மற்றும் கொழும்பு நீதிமன்றங்களுக்கு அவரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் குறைந்தது 4 வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட 10 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, ஹரக்கட்டாவை மிகவும் திறம்பட நிர்வகிக்கும் திறனில் பாதுகாப்புப் படையினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எதிர்கால விசாரணைகளின் செயல்திறன் நாட்டிற்கு முக்கியமானது என்றும் நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |