அரச தொழிலை பெற்று தர யாழ் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி கைது!
அரசாங்கத்தில் தொழில் பெற்றுக்கொடுக்க யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கை சேர்ந்த இந்த பெண், அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த அரச அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் தனது நண்பர் எனக் கூறி, அரசாங்கத்தில் தொழிலை பெற்று தர பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்த பெண் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனிடம் கூறியதை அடுத்து, அவர், அதனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் பொலிஸார் அந்த அரச அதிகாரியை கைது செய்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
