தளராப்பிடியை தளர்த்திய இலங்கை அரசாங்கம்: சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலை ஆரம்பித்தது
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியை நேற்று சந்தித்துள்ளார்.
இரண்டு தரப்புக்களை கோடிட்டு ரொயட்டர் இதனை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ, அமைச்சர் பசி;ல் ராஜபக்சவையும், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்,ஆட்டகலவையும் சந்தித்துள்ளார்.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிந்திய மீளாய்வு பற்றி இரண்டு தரப்புக்களும் ஆராய்ந்துள்ளன.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஏப்ரலில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை ஆரம்பித்து இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரதன்மையை பேண இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பிரதிநிதி இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கிறார்.
ஏற்கனவே அமெரிக்கா உட்பட்ட வெளிநாடுகளும் இலங்கையின் பல தரப்பினரும் வலியுறுத்தியபோதும், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் விடாப்பிடிக்கொள்கையை கொண்டிருந்தது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri