இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! ஸ்கொட்லாந்தின் வைத்து அறிவித்த கோட்டாபய
இரசாயனப் பசளைகள் மற்றும் களை நாசினிகளின் இறக்குமதித்தடையால், இலங்கையில் இயற்கை விவசாயத்துக்கான புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொிவித்துள்ளாா்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் நேற்று உரையாற்றியபோதே அவா் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதாரப் பிரச்சினை, நீர் மாசுபாடு, மண் சிதைவு காரணமாக இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகளின் இறக்குமதியை இலங்கை அண்மையில் கட்டுப்படுத்தியது.
இதன்காரணமாக இயற்கை விவசாயத்தில் புதிய முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் கலந்துகொள்கின்றனா்.