கோட்டாபய - ரணில் தலைமையிலான அரசால் அரங்கேற்றப்படும் நாடகம்! ஐக்கிய மக்கள் சக்தி சாடல்
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கோட்டாபய - ரணில் தலைமையிலான அரசால் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
"19 பிளஸ் என்பதே 21 ஆவது திருத்தச் சட்டமூலமாக வருகின்றது என ஆளுங்கட்சி கூறியது. ஆனால், 19 மைனஸ்தான் முன்வைக்கப்பட்டுள்ளது.
19 இல் இருந்த முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. அமைச்சரவை அனுமதி வழங்காத, 21ஆவது திருத்தச் சட்டமூலம் எதற்காகக் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றது. இது காலத்தை இழுத்தடிக்கும் செயலாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நிறைவடையும் வரையே, இந்த நாடகம் நீடிக்கும்.
அதன்பின்னர் 21 ஐக் கைவிட்டு விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.