மஹிந்தவிடம் இருந்த ஓர் அதிகாரம் கோட்டாபயவின் பொறுப்பில்
தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் இருந்த அதிகாரம் ஒன்றை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa ) தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் உள்ள பொது அறக்கட்டளை திணைக்களத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் அதன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்காக சிறப்பு ஆலோசனை குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நிதி அமைச்சராக சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa ) செயற்பட்ட நிலையில் அந்த பதவியும் அவரிடம் இருந்து அகற்றப்பட்டது.
அவ்வாறு அகற்றப்பட்ட பதவி தற்போதைய நிலையமைச்சரும் சகோதரருமான பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு